- Advertisement -
கண்டி பிரதேசத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக, கண்டி- உடபோவல வீதியின் ஒரு பகுதி, வீடொன்றின் மீது சரிந்து விழுந்ததால், 13 வயது சிறுமியொருவர் காயமடைந்து, பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம், நேற்று முன்தினம் (26) இரவு 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன் இதன்போது வீட்டில் அவரது தந்தையுடன் சிறுமி மாத்திரமே இருந்துள்ளார்.
இதனையடுத்து சிறுமியை அவரது தந்தை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ள நிலையில், வீடு கடுமையாக சேதமடைந்துள்ளது.
இடிந்து விழுந்த வீதியில் வெடிப்பு ஏற்பட்டுள்ளமை தொடர்பில், ஜனாதிபதி செயலகம் மற்றும் கங்கவட்டகோரல பிரதேசசபைக்கு அனுப்பப்பட்ட நிலையில், இந்த விடயம் தொடர்பில் உடனடியாக தேவையான நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதி செயலகத்தால் கங்கவட்டகோரல பிரதேச சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இதற்கு தேவையான நடவடிக்கை எடுப்பதற்கு எந்தவொரு அதிகாரியும் முன்வரவில்லை என வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை குறித்த வீதியின் பல இடங்களிலும் இவ்வாறு வெடிப்பு காணப்படுவாகவும், எதிர்வரும் காலங்களில் வெடிப்பு ஏற்பட்டுள்ள இடங்களில் மணசரிவு ஏற்படும் என்றும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.