- Advertisement -
திருகோணமலை தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட என்.சி.வீதி, மத்திய வீதி மற்றும் 3ஆம் குறுக்குத்தெரு வீதிகளில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகளும் பொலிஸாரும் இணைந்து திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதன்போது, பாவனைக்கு ஒவ்வாத அழகுசாதனப் பொருள்கள், கிறீம் வகைகள், சாயப்பொருள்கள், போலியாக தயாரிக்கப்பட்ட சவக்கார வகைகள் மற்றும் இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்கு தடைசெய்யப்பட்ட பொருள்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டதாக, நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களின் சந்தைப் பெறுமதி சுமார் 20 இலட்சத்துக்கும் அதிகம் என தெரிவித்த அதிகாரிகள், அப்பொருள்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்க உள்ளதாகவும் கடை உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தனர்.
மேலும், குறிப்பிட்ட தடை விதிக்கப்பட்ட பொருள்களை சமூக வலைதளங்களில் விற்க முற்பட்ட ஒருவரையும், இன்று (21) காலை நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.