- Advertisement -
ஹட்டன் தனியார் வங்கியின் தானியக்க இயந்திரத்தில் வைப்பிலிட கொண்டு வரப்பட்ட, சுமார் 60 மில்லியன் ரூபாயை கொள்ளையிட்டு செல்ல முயற்சித்த ஒருவர் நுவரெலியா- கெப்பெட்டிபொல பகுதியில் வைத்து , நுவரெலியா- மிபிலிமான விசேட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று மாலை (01) இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் இருந்து தனியார் வங்கிகளில் உள்ள தன்னியக்க இயந்திரங்களுக்கு நிரப்புவதற்கு கொண்டு வரப்பட்ட பணமே இவ்வாறு கொள்ளையிட முயற்சிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரான சாரதியுடன்,குறித்த தனியார் வங்கியின் அதிகாரிகள் மற்றும் துப்பாக்கியுடன் பாதுகாப்பு அதிகாரி ஒருவருடன் ஹட்டனிலுள்ள தனியார் வங்கிக்கு வருகைத் தந்துள்ளனர்.
இதன்போது சாரதியைத் தவிர ஏனைய அனைவரும் வானிலிருந்து இறங்கி, வங்கிக்குள் நுழைவதைப் பயன்படுத்திக்கொண்ட சந்தேகநபர் பணம் மற்றும் வானுடன் தலைமறைவானார்.
எனினும் அந்த வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த ஜீ.பி.எஸ். இயந்திரம் மூலம் சந்தேகநபர் வாகனத்தை செலுத்தும் வீதிகள் குறித்து ஆராய்ந்த அதிகாரிகள் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவித்துள்ளனர்.
இதன்போது, வீதிகளில் வீதி தடை ஏற்படுத்தி.,குறித்த நபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், கெப்பெட்டி பொலயினை கடக்கும் பொழுது பொலிஸார் கைது செய்துள்ளனர்.
42 வயதான குறித்த சந்தேகநபர் தியத்தலாவை பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் இராணுவ சிப்பாய் என ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.