Sun, Sep25, 2022
Homeமாவட்டச் செய்திகள்கிழக்குசிறுவன் துஷ்பிரயோகம்; சந்தேக நபர் சடலமாக மீட்பு

சிறுவன் துஷ்பிரயோகம்; சந்தேக நபர் சடலமாக மீட்பு

பெரியநீலாவணை பகுதியில் சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக தேடப்பட்ட உத்தியோகத்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை(26) வழமை போன்று மட்டக்களப்பு மாவட்டம் கல்லடி இலங்கை மின்சார சபை காரியாலயத்தில் கடமையாற்றும் 57 வயதான நுகர்வோர் ஒருங்கிணைப்பாளர் ஒருவர், கடமை நிமிர்த்தம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள வீடொன்றிற்கு சென்று மின்மானியை பரீட்சித்துள்ளார்.

பின்னர் அந்த வீட்டில் தாயுடன் நின்ற 9 வயது மதிக்கத்தக்க சிறுவனை அருகில் உள்ள வீட்டின் மின் மானியை பார்வையிட துணைக்கு அழைத்து சென்றுள்ளதுடன் அங்கு சிறுவனுடன் பாலியல் செயற்பாட்டில் ஈடுபட்டு தப்பி சென்றுவிட்டார்.

பின்னர் சிறுவன் தனக்கு நடந்த அனைத்து விடயங்களையும் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.

இதனால் குறித்த மின்சார சபை ஊழியர் தனக்கு எதிராக பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தினர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யவுள்ளதை அறிந்து, நேற்று அதிகாலை தனது வீட்டின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனை அடுத்து அவரை மீட்டு கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த போதும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியசாலை தகவல்கள் குறிப்பிட்டன.

பிரேத பரிசோதனைகளின் படி கழுத்து பகுதி சுருக்கினால் இறுகியதால் மூச்சுத் திணறி இறப்பு சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உறவினர்களிடம் சடலம் கையளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த நபர் திருமணமாகியுள்ளதுடன் இரு பிள்ளைகளளின் தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவம் தொடர்பில் பெரியநீலாவணை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். (R)

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3JWB0En

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க