- Advertisement -
யாழ்ப்பாணம் – குருநகர் கடற்பகுதி ஊடாக யாழ்ப்பாணத்துக்கு கடத்திவரப்பட்ட சுமார் 369 கிலோ கிராம் மஞ்சள் கட்டிகள், கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஐந்து மாடி கடற்பரப்பில் சந்தேகத்துக்கிடமான படகு ஒன்றை அவதானித்த கடற்படையினர், அதனை பின் தொடர்ந்த போது, படகில் இருந்தவர்கள் தப்பிச் சென்றனர்.
இதனையடுத்து, கடற்படையினர் படகை சோதனையிட்டபோது அதில் இருந்து மஞ்சள் கட்டி கூடைகளை கைப்பற்றினர்.
சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படாத நிலையில் கடற்படையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.