Tue, Oct19, 2021
Homeமாவட்டச் செய்திகள்யாழில் மின்னல் தாக்கி ஒருவர் பலி; ஒருவர் படுகாயம்

யாழில் மின்னல் தாக்கி ஒருவர் பலி; ஒருவர் படுகாயம்

வடமராட்சி கிழக்கு – வெற்றிலைக்கேணி, கோரியடிப் பகுதியில், இன்று (23) பிற்பகல், மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இடைக்காடு – வெற்றிலைக்கேணி பகுதியை சேர்ந்த குயின்ரன் உமேஸ் (வயது- 35) என்பவர் உயிரிழந்ததுடன், கட்டைகாட்டைச் சேர்ந்த ஸ்ரானிலேல் ஜெயக்குமார் (வயது-45) என்பவர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

அப்பகுதியில் மழை பெய்ததாகவும் அச்சமயம் கோரியடிப் பகுதியிலுள்ள வாடியில் நின்றிருந்த மீனவர்கள் மீது மின்னல் தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க