Mon, Jun27, 2022
Homeமாவட்டச் செய்திகள்மலையகம்கூரிய ஆயுதத்தால் இளைஞர்கள் தாக்குதல்; விளக்கமறியலில் இருந்து விடுதலையானவர் கொடூரம்

கூரிய ஆயுதத்தால் இளைஞர்கள் தாக்குதல்; விளக்கமறியலில் இருந்து விடுதலையானவர் கொடூரம்

பண்டாரகம வல்கம சுனாமி வீட்டுத் திட்டப் பகுதியில் மக்கள் பெருமளவு கூடியிருந்த நிலையில், இளைஞர்கள் இருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு, அவர்களது கைகள் வெட்டப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (17) இடம்பெற்றுள்ள இத்தாக்குதலில் ஒரு இளைஞரின் இரு கைகளும் துண்டாடப்பட்டுள்ளதாகவும், மற்றொரு இளைஞரின் இடது கையில் மாத்திரம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டு அண்மையில் விடுதலை செய்யப்பட்ட நபரே இவ்வாறு கொடூரமான முறையில் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

spot_img
spot_img

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க