- Advertisement -
பொதுமக்கள் முறையான சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றுகிறார்களா என்பதை பரிசீலிப்பதற்காக மேல் மாகாணத்தில் பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.
அதன்படி, பஸ்களில் இருக்கைகளுக்கு அதிகமாகப் பயணிகளை ஏற்றிச் செல்வது, முகக்கவசம் அணியாமை, குளிரூட்டப்பட்ட பஸ்களுக்கு நடமாடும் வியாபாரிகள் நுழைதல் போன்ற நடடிக்கைகளை ஆராய்வதற்காக, இந்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நேற்று (14) நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 2 மணிவரையிலான இரண்டு மணிநேர சோதனை நடவடிக்கையில், 451 பொலிஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
318 பஸ் ஊழியர்கள், 65 குளிரூட்டப்பட்ட பஸ்கள் மற்றும் 505 வர்த்தக நிலையங்களுக்கு சுகாதார வழிகாட்டுதல்களை மீறுவதற்கு எதிராக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகக் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.