நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் வசூல் சக்ரவர்த்தியாக திகழ்கிறார். இவர் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு சாதனை படைத்து வருகிறார்.
இவரின் கால்ஷீட் கிடைக்காத என தவம் கிடக்கும் தயாரிப்பாளர்கள் ஏராளம். மாஸ்டர் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தற்போது நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார்.
பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்க அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்திலிருந்து வெளியான அரபிக் குத்து பாடல் செம வைரலாகி வருகிறது. குறிப்பாக விஜய்யின் அசத்தல் நடனம் விஜய் ரசிகர்களை தாண்டி அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து வருகிறது.
தற்போது பல ரசிகர்களும், திரைப்பிரபலங்களும் இப்பாடலுக்கு ரீல்ஸ் செய்து வீடியோ வெளியிட்டு வருகின்றனர். சமீபத்தில் அனிருத் மற்றும் சமந்தா அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டனர்.
வருகின்ற ஏப்ரல் மாதம் இப்படம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இப்படத்தை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கவுள்ளது. தமிழில் தோழா படத்தை இயக்கிய வம்சி இப்படத்தில் விஜய்யை முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் காட்டப்போவதாக தகவல்கள் வந்துள்ளன.
இந்நிலையில் தற்போது விஜய்யின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகிவுள்ளது. கையில் குழந்தையுடன் செம ஸ்டைலிஷாக இருக்கும் விஜய்யின் அந்த புகைப்படம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.
கையில் குழந்தையுடன் செம கியூட்டாக இருக்கும் விஜய்யின் புகைப்படம் தற்போது செம வைரலாகிவருவது குறிபிடத்தக்கது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.