டிடிக்கு இரண்டாவது திருமணம்
திவ்யதர்ஷினி கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக தொகுப்பாளினியாக கலக்கி வருகிறார். விஜய் தொலைக்காட்சியில் தான் அதிக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.
இப்போது தான் தனது காலில் ஏற்பட்ட பிரச்சனையால் எந்த நிகழ்ச்சியையும் நடத்தாமல் உள்ளார். அண்மையில் கனெக்ட் படத்திற்காக நடிகை நயன்தாராவை பேட்டி எடுத்திருந்தார்.
தொகுப்பாளினியும், நடிகையுமான டிடிக்கு ஸ்ரீகாந்த் என்பவருடன் திருமணம் நடைபெற்று விவாகரத்தும் நடந்தது. தற்போது தனியாக தனது அம்மாவுடன் வசித்து வரும் டிடிக்கு மறுமணம் என கூறப்படுகிறது.
கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை அவர் மறுமணம் செய்ய இருப்பதாக தெரிவிக்கின்றனர், ஆனால் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் இல்லை.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.