பல ஆண்டுகள் கழித்து தன் தம்பி தனுஷை வைத்து நானே வருவேன் படத்தை இயக்கி வருகிறார் செல்வராகவன். படம் குறித்து சமூக வலைதளங்களில் அவ்வப்போது அப்டேட் கொடுத்த தனுஷ் ரசிகர்களை மகிழ்விக்கிறார்.
அவரவர் வேலையில் பிசியாக இருந்ததால் ஒன்றாக இருக்க முடியவில்லை. ஆனால் நானே வருவேன் படம் மூலம் தனுஷுடன் நேரம் செலவிட முடிகிறது. தங்க மனசு இருக்கும் சிங்கம் தனுஷ் என ட்வீட் செய்துள்ளார் செல்வராகவன்.
இந்நிலையில் செல்வராகவனின் நிலைமையை நினைத்து சினிமா ரசிகர்கள் பாவப்படுகிறார்கள். தனுஷ் ஒரு அருமையான நடிகர் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் அவர் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம், மாறன் என்று அடுத்தடுத்து இரண்டு படங்கள் தோல்வி அடைந்துவிட்டன.
அதனால் கண்டிப்பாக ஒரு ஹிட் கொடுத்தே ஆக வேண்டும் என்கிற கட்டாயத்தில் இருக்கிறார் தனுஷ். இந்நிலையில் அவர் நானே வருவேன் படத்தில் நடிப்பதால், அது ஹிட்டாகியே வேண்டும் என்கிற நிலைமை.
செல்வராகவன், தனுஷ் கூட்டணி சேர்ந்தாலே அந்த படம் ஹிட் தான். இருப்பினும் நானே வருவேன் படத்தை ஹிட்டாக்கியே ஆக வேண்டும் என்கிற கட்டாயம் தற்போது செல்வராகவனுக்கு இருக்கிறது.
இந்த பிரஷரை அவர் எப்படி தாங்கிக் கொள்ளப் போகிறாரோ என்கிறார்கள் ரசிகர்கள்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.