Sunday, June 8, 2025
  • கொழும்பு தமிழ்
  • நியூஸ் 21
Tamil Seithi
Advertisement Banner
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
Radio
No Result
View All Result
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
Radio
No Result
View All Result
Tamil Seithi
No Result
View All Result
Home சினிமா

வாரிசு விமர்சனம் : பாட்டு, நடனம், சண்டை, சென்டிமென்ட் எல்லாம் இருக்கு…. ஆனால்..?

செய்திப்பிரிவு by செய்திப்பிரிவு
January 12, 2023 12:33 pm
in சினிமா
Varisu movie review: வாரிசு திரை விமர்சனம்
201
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

Varisu movie review: வாரிசு திரை விமர்சனம்

 

தொழில் போட்டிக்கும், குடும்ப உறவுகளுக்கும் இடையிலான சிக்கல்களை தீர்க்கும் ‘வாரிசு’ வாய்க்கப்பெற்றால் என்ன நடக்கும் என்பதுதான் படத்தின் ஒன்லைன்.

நாளொன்றுக்கு 10 மணித்தியாலங்கள் மின்வெட்டு – வெளியான தகவல்

ஜெயபிரகாஷ் குரூப் ஆஃப் கம்பெனிக்கும் (பிரகாஷ்ராஜ்), ராஜேந்திரன் குரூப் ஆஃப் கம்பெனிக்கும் (சரத்குமார்) இடையே தொழில் போட்டி வலுத்து வருகிறது. இதனிடையே, தொழிலதிபர் ராஜேந்திரன் தனக்குப் பிறகு தனது தொழிலை ஏற்று நடத்த தனது மகன்களில் திறமையான ஒருவரை அடையாளம் காண முயற்சித்துக் கொண்டிருக்கிறார். மற்றொருபுறம் வீட்டிலிருந்து விலக்கப்பட்டிருக்கும் விஜய் ராஜேந்திரன் (விஜய்) தனது பெற்றொரின் 60ஆம் கல்யாணத்திற்காக மீண்டும் வீட்டின் படியேற, அவருக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. இறுதியில் ராஜேந்திரன் தனது அடுத்த தொழில் வாரிசை கண்டறிந்தாரா? விஜய் ஏன் வீட்டிலிருந்து விலக்கப்பட்டிருக்கிறார்? அவருக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன? – இதை சென்டிமென்டாக சொல்லியிருக்கும் படம்தான் ‘வாரிசு’.

மிரட்டும் நடன அசைவுகள், புது ஹேர்ஸ்டைல், ‘க்யூட்’ முகபாவனைகளால் தோற்றத்தில் அழகூட்டி வயதை வெறும் ‘எண்’ என மீண்டும் நம்ப வைத்திருக்கிறார் விஜய். ‘ரஞ்சிதமே’ பாடலின் கடைசி நிமிடங்களில் சிங்கிள் ஷாட்டில் அவரது ஆட்டம் திரையரங்கை ஆர்ப்பரித்து அலறவிடுகிறது. குழந்தைத் தனமான சில பாவனைகளும், அதற்கேற்ற உடல்மொழியும், ‘தீ’ தளபதி பாடலில் அவரின் நடையும் ரசிகர்களுக்கு ‘பொங்கல்’ விருந்து.

Also Read: விஜய்யுடன் குத்துப்பாட்டு… கர்ப்பமாக இருந்த மாளவிகா

யுவதியின் கண்களுக்கு மிளகாய்த்தூள் தூவி தங்க சங்கிலி அபகரிப்பு

ராஷ்மிகா மந்தனாவின் பங்கு கதைக்கும், கதையின் பங்கு ராஷ்மிகாவுக்கும் தேவைப்படாதது வம்சிக்கு புலப்படாமல் போனது ஏனோ?. காதலுக்காகவும், பாடலுக்காகவும் மட்டுமே வந்து செல்கிறாரே; தவிர பெரிய வேலையில்லை. சரத்குமாரின் நடிப்பு அவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் தன்மையை அதற்கே உண்டான மென்சோகத்துடன் கடத்தியிருந்தது. தவிர பிரகாஷ்ராஜ், பிரபு, யோகிபாபு, ஷாம், ஸ்ரீகாந்த், ஜெய சுதா உள்ளிட்டோர் கொடுத்த வேலையை செய்கின்றனர்.

‘குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி’ என்ற அடைமொழியை உறுதியிட்டு எழுதும் அளவிற்கு சென்டிமென்ட் காட்சிகளை திகட்ட திகட்ட கொடுத்திருக்கிறார் இயக்குநர் வம்சி. படத்தின் முதல் பாதியில் வரும் ‘அம்மா’ பாடலும், அதற்கான சூழ்நிலையும், விஜய்க்கும் அவரது அம்மாவுக்குமான சென்டிமென்ட்டும் ஈர்க்கிறது. வழக்கமான இன்ட்ரோ பாடல், கண்டதும் காதல் என க்ளிஷேவாக தொடங்கும் படத்தில் விஜய்யின் அறிமுகக் காட்சியில் சிஜி துருத்திக்கொண்டு நிற்பது நெருடல்.

Varisu movie review: வாரிசு திரை விமர்சனம்

மொத்த படத்தையும் தமனின் இசை திரைக்கதையுடன் இணைந்து காட்சிகளை உந்தி அடுத்தடுத்த கட்டங்களுக்கு தள்ளி பலம் சேர்க்கிறது. குறிப்பாக ‘தீ தளபதி’ பாடலின் விஷுவல்ஸ் அதற்கான விஜய்யின் மாஸான நடை நிச்சயம் ரசிகர்களுக்கு காட்சி விருந்து. பாடல்கள் கேட்க நன்றாக இருந்தாலும், கதை ஓட்டத்திலிருந்து விலகி திணிக்கப்பட்டிருப்பது பலவீனம். யோகிபாபுவுக்கும் – விஜய்க்குமான கனெக்‌ஷன் கைகொடுக்கிறது. சில இடங்களில் விஜய் முயற்சித்திருக்கும் காமெடிகள் புன்முறுவ வைக்கின்றன.

படத்தின் மிகப் பெரிய பிரச்னை, அதன் மையக்கதை. விஜய்க்கும் சரத்குமாருக்கும் இடையிலான பிரச்சினையை காட்டியிருக்கும் விதம் அழுத்தமில்லாமல் இருப்பதுதான். அதேபோல வில்லனாக வரும் பிரகாஷ்ராஜ் கதாபாத்திரத்தின் பலவீனமான எழுத்து சுவாரஸ்யமில்லாமல் கடக்கிறது. படத்தின் தொடக்கத்தில் ‘சூர்யவம்சம்’ காட்சிகள் நினைவுக்கு வர, பின், ‘சந்தோஷ் சுப்ரமணியம்’ எட்டிப் பார்க்கிறது. ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தைப் பார்க்கும் உணர்வும் எழாமலில்லை. காரணம், அந்தப் படத்தின் கேங்க்ஸடருக்கு பதிலாக கார்ப்பரேட் தொழிலை பின்புலமாக வைத்தால் ‘வாரிசு’ கதை ஒட்டிவிடுகிறது. அப்பா – மகன்கள், அண்ணன் தம்பிகளுக்கிடையிலான சென்டிமென்ட் காட்சிகள் மூட்டையில் திணிக்கும் துணியைப் போல பிதுங்கி புடைத்திருக்கிறது.

கணிக்கக்கூடிய கதையுடன் காட்சிகளாகவும் எளிதில் கணிக்க முடிவதால் சுவாரஸ்யம், விறுவிறுப்புக்கு வறட்சி நிலவுகிறது. தேவையில்லாத இடங்களில் பாடல்களும், சண்டைக் காட்சிகளும், போர்ட் ஆஃப் டைரக்டர்ஸ் வாக்குப் பதிவு என கூறி வைக்கப்பட்ட காட்சி ஒன்றும் சோதிக்கிறது. விஜய் நடித்த முந்தைய படங்களின் வசனங்களை ரீமேடாக்கியிருப்பது சில இடங்களில் கைகொடுக்கிறது. பல இடங்களில் ‘கிறிஞ்ச்’ ஆகியிருக்கிறது. எஸ்.ஜே.சூர்யாவின் சிறப்புத் தோற்றம் ரசிக்க வைக்கிறது. சில இடங்களில் அதீத செயற்கை ஆக்‌ஷன் காட்சிகள் தெலுங்கு படங்களை நினைவூட்டுகின்றன.

குறிப்பாக, விஜய் போன்ற பெரிய நடிகர் ஒருவரின் படத்தில் சிறுபான்மையினர் ஒருவரை குற்றவாளியாக்கி, எளிய மக்களை மாணவிகளை கடத்துபவர்களாக காட்டும் காட்சிகள் அறப்பிழைகள். படத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விஜய்யின் அறிமுக காட்சியும், இன்டர்வல் காட்சியும் எந்த பாதிப்புமில்லாமல் கடக்கிறது. கார்த்திக் பழனி ஒளிப்பதிவும், பிரவீன்கே.எல் படத்தொகுப்பும் மொத்த படத்துக்குமான ஆறுதல்.

மொத்தத்தில் இந்த வாரிசை கண்டு ரசிகர்கள் கொஞ்சலாமே தவிர, மற்றவர்கள் அஞ்சாமல் இருக்க முடியுமா என்பது கேள்வியே.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM – இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/SeithiLK
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.
Tags: வாரிசு விமர்சனம்
ShareTweetSendShare

Related News

நாகர்ஜூனா

9 வயது கூடிய பெண்ணுடன் நாகார்ஜுனாவின் மகன் காதல் திருமணம்..!

June 6, 2025 6:07 pm
சரிகமபவில்

சரிகமபவில் பாடகி போல் பாடி அசத்திய போட்டியாளர்

June 1, 2025 6:27 pm
ஐசரி கணேஷ்

மகளுக்கு ஐசரி கணேஷ் கொடுத்த பிரம்மாண்ட பரிசு.. என்ன தெரியுமா?

June 1, 2025 5:47 pm
யாஷிகா ஆனந்த் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ ஷூட்!

யாஷிகா ஆனந்த் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ ஷூட்!

June 2, 2025 6:03 pm
பிரபல சிங்கள நடிகை சேமினி இத்தமல்கொட அதிரடி கைது

பிரபல சிங்கள நடிகை சேமினி இத்தமல்கொட அதிரடி கைது

May 11, 2025 1:27 pm
விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டாவின் 36 வது பிறந்தநாள்.. தாமதாக பிறந்தநாள் வாழ்த்து சொன்ன ராஷ்மிகா

May 10, 2025 3:47 pm
Leave Comment

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங்க்

இந்தியாவில் கால் பதிக்கும் ஸ்டார்லிங்க்; அனுமதி வழங்கிய இந்திய அரசு

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:13 pm
0

நாகர்ஜூனா

9 வயது கூடிய பெண்ணுடன் நாகார்ஜுனாவின் மகன் காதல் திருமணம்..!

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:07 pm
0

டெங்கு நோய்

டெங்கு காய்ச்சலால் இதுவரை 13 பேர் உயிரிழப்பு

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:41 am
0

பல்கலைக்கழக அனுமதி

பல்கலைக்கழக அனுமதிக்கு 90,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:38 am
0

முக்கிய செய்தி

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

by செய்திப்பிரிவு
May 28, 2025 11:39 am
0

அஸ்வெசும கொடுப்பனவு

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியானி அறிவிப்பு

by செய்திப்பிரிவு
May 28, 2025 11:35 am
0

மழை நிலைமை

மழை நிலைமை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

by செய்திப்பிரிவு
May 27, 2025 8:22 am
0

கோர விபத்தில் 21 பேர் பலி

இலங்கையை உலுக்கிய கோர விபத்தில் 21 பேர் பலி

by செய்திப்பிரிவு
May 11, 2025 1:29 pm
0

போட்டோ கேலரி

ஸ்டார்லிங்க்

இந்தியாவில் கால் பதிக்கும் ஸ்டார்லிங்க்; அனுமதி வழங்கிய இந்திய அரசு

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:13 pm
0

நாகர்ஜூனா

9 வயது கூடிய பெண்ணுடன் நாகார்ஜுனாவின் மகன் காதல் திருமணம்..!

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:07 pm
0

டெங்கு நோய்

டெங்கு காய்ச்சலால் இதுவரை 13 பேர் உயிரிழப்பு

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:41 am
0

பல்கலைக்கழக அனுமதி

பல்கலைக்கழக அனுமதிக்கு 90,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:38 am
0

Tamil Seithi

© 2025 செய்தி – Design and Development by WebStudio.

Navigate Site

  • About Us
  • Contact Us
  • Cookies Policy
  • Privacy Policy
  • Terms & Conditions

Follow Us

No Result
View All Result
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்

© 2025 செய்தி – Design and Development by WebStudio.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist