பிரபல பாடகரான கேகே நேற்று முன்தினம் கொல்கத்தாவில் கல்லூரி ஒன்றின் கலாச்சார விழாவில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று முடித்துவிட்டு அங்கு ஏற்பாடு செய்யப்பட்ட விடுதி அறைக்கு சென்றார் கேகே. ஆனால் அங்கு சென்ற பிறகு கேகேவுகுகு நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நெஞ்சுவலி ஏற்பட்டதும் முதலுதவி கூட அளிக்கப்படாமல் நடத்தியே ஹோட்டல் அறையில் இருந்து வாகனம் வரை அழைத்து செல்லப்பட்டார் கேகே. அந்த வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கேகே மாரடைப்பால் மரணமடைந்ததாக கூறப்படுகிறது.
கேகே உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு குண்டுகள் முழங்க மேற்குவங்க அரசு சார்பில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனிடையே கேகேவின் தலை மற்றும் முகத்தில் காயங்கள் இருந்ததால் அவரது மரணத்தை இயற்கைக்கு மாறான மரணம் என போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் கச்சேரியின் போது அங்கு வெப்பம் அதிகம் இருந்ததாகவும், இதனால் பாடகர் கேகேவுக்கு வியற்வை கொட்டியதாகவும் நிகழ்ச்சியை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். 2500 பேர் அமரும் அந்த ஆடிட்டோரியத்தில் 5000க்கும் பேருக்கு மேல் அனுமதிக்கப்பட்டிருந்தாகவும், ஏசிக்கூட வேலை செய்யவில்லை என்றும் கூறியுள்ளனர்.
இதனால் ஆடிட்டோரியம் முழுவதும் ரொம்பவே வெட்கையாக இருந்ததாகவும் அப்போது கேகேவுக்கு வியர்த்து கொட்டியதால் ஏசி போடுமாறு மைக்கிலேயே அவர் கூறியதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் பாட்டுப்பாடும் போது லைட்ஸை ஆஃப் செய்யுமாறு கேகே கூறியதாகவும் தெரிவித்துள்ளனர்.
வெப்பத்தை தணிக்க கதவுகளை திறந்து வைத்ததோடு தீயணைப்பான் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். ரசிகர்கள் தெரிவித்திருக்கும் இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.