தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழில் தடையற தாக்க, புத்தகம், என்னமோ ஏதோ, தேவ், என்.ஜி.கே. ஸ்பைடர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இதில் கார்த்தியின் ‘தீரன் அதிகாரம்’ படத்தின் மூலம்தான் மிகவும் பிரபலமானார். தற்போது சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.
தமிழை தவிர தெலுங்கு, இந்தி படங்களிலும் பிசியாக நடித்து வரும் இவர், சமீபத்தில் பிரபல பாலிவுட் தயாரிப்பாளரும், நடிகருமான ஜாக்கி பாக்னானியை காதலிப்பதாக வெளிப்படையாக அறிவித்தார்.
இதனால் இன்ப அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் திருமணம் எப்போது என்று கேள்வி எழுப்பி வந்தது. இதையடுத்து ரகுல் ப்ரீத் சிங்கிற்கு ரகசியம் திருமணம் முடிந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தனது திருமணம் குறித்து ரகுல் ப்ரீத் சிங் மறுப்பு தெரிவித்துள்ளார். அதில், இது போன்ற வதந்திகளை நம்பாதீர்கள் என்றும், நான் தற்போது 10 படங்களில் பிசியாக நடித்து வருவதாகவும், அதனால் என் முழு கவனமும் திரைப்படங்களில் நடிப்பதில் மட்டுமே உள்ளது என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே என் காதலரை அறிமுகப்படுத்திய பிறகும் இப்படி தகவல் பரப்புவது தவறு. தனிப்பட்ட உணர்வுகளும் மதிப்பளியுங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.