கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி லவ் டுடே படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன்.
விரைவில் லவ் டுடே படம் ஹிந்தி டப் செய்யப்பட்டோ அல்லது ரீமேக் செய்யப்பட்டோ வெளிவரும் என தகவல் வெளியாகியுள்ளது.
7 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் தயாரிப்பாளருக்கும் சுமார் ரூ. 44.8 கோடி வரை லாபத்தை அள்ளிக்கொடுத்துள்ளது.
இந்நிலையில், இவ்வளவு பெரிய வெற்றியை கொடுத்த இயக்குனரும், ஹீரோவுமான பிரதீப் ரங்கநாதன் முதன் முதலில் இப்படத்தை கமிட் செய்யும்பொழுது, ரூ. 70 லட்சம் சம்பளமாக வாங்கியுள்ளார்.
படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு தயாரிப்பு நிறுவனம் கூடுதலான ரூ. 80 லட்சம் கொடுத்துள்ளது. இதன்மூலம் லவ் டுடே படத்திற்காக ரூ. 1.50 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் பிரதீப் ரங்கநாதன்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Android App Download Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.