நடிகை ஸ்ரீ திவ்யா கருப்பு சேலையில் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்த நடிகை ஸ்ரீ திவ்யா, 2010 ஆம் ஆண்டு தெலுங்கு படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.
தொடர்ந்து விஷ்ணு விஷாலுடன் ஜீவா, விக்ரம் பிரபுவுடன் வெள்ளக்கார துறை , மீண்டும் சிவகார்த்திகேயனுடன் காக்கி சட்டை ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு ஜீவாவுடன் சங்கிலி புங்கிலி கதவ திற என்ற திரைப்படத்தில் நடித்த ஸ்ரீதிவ்யா சில வருடங்கள் சினிமா பக்கமே இல்லாமல் இருந்தார்.
பின்னர், மெய்யழகன் திரைப்படத்தில் நடித்த நிலையில், தமிழில் ரெய்டு என்னும் படத்தில் நடித்திருக்கிறார்.