தன்னை விட மூத்தவரான நடிகை அம்ரிதா சிங்கை காதலித்து திருமணம் செய்தார் பாலிவுட் நடிகர் சயிஃப் அலி கான். அவர்களுக்கு சாரா, இப்ராஹிம் என்று இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். சயிஃபும், அம்ரிதாவும் விவாகரத்து பெற்றுவிட்டனர்.
விவாகரத்திற்கு பிறகு நடிகை கரீனா கபூரை காதலித்து மணந்தார் சயிஃப். சாரா அலி கான், இப்ராஹிம் ஆகியோர் சித்தி கரீனாவுக்கு நெருக்கமானவர்கள்.
இந்நிலையில் தன் பெற்றோர் பற்றி சாரா அலி கான் பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது,
என் வீட்டில் வசிக்கும் இரண்டு பேர் சந்தோஷமாக இல்லை என்பது 9 வயதிலேயே எனக்கு புரிந்தது. இரண்டு வீடுகளில் வசிக்க ஆரம்பித்த பிறகு அவர்கள் சந்தோஷமாக இருந்தனர்.
10 ஆண்டுகளாக சிரிக்காமல் இருந்த என் அம்மா புது வீட்டிற்கு சென்ற பிறகு சந்தோஷமாக இருந்தார். என் பெற்றோர் இரண்டு வீடுகளில் சந்தோஷமாக இருக்கும்போது நான் ஏன் கவலைப்பட வேண்டும். அதனால் என் பெற்றோரின் விவாகரத்தால் என் வாழ்க்கை கடினமாக ஆகவில்லை.
என் அம்மா சந்தோஷமாக சிரிக்கிறார், ஜோக் அடிக்கிறார். இதற்கு முன்பு அவர் இப்படி இல்லையே என்று நான் ஃபீல் செய்தது உண்டு. அவரை மீண்டும் இப்படி பார்ப்பதில் மகிழ்ச்சி. என் அம்மா தான் என் தோழி. எனக்கு என்ன தேவை என்றாலும் அப்பா இருக்கிறார் என்றார்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.