தளபதி விஜய் நடித்து வரும் 65வது திரைப்படமான ’பீஸ்ட்’ திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் தளபதி விஜய்யின் 66வது படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க இருப்பதாகவும் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்க இருப்பதாகவும் சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தளபதி விஜய்யின் 67வது படத்தை ’மாஸ்டர்’ இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தை ’மாஸ்டர்’ படத்தை தயாரித்த லலித்குமார் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
எனவே ’மாஸ்டர்’ கூட்டணி மீண்டும் இணைய வாய்ப்பு இருப்பதால் மீண்டும் ஒரு சூப்பர்ஹிட் படம் விஜய்க்கு உறுதி என கூறப்படுகிறது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.