ஹாலிவுட் திரையுலகில் எப்போதும் மவுசு குறையாத ஒரு ஜானர் என்றால் டைனோசர் படங்கள் தான். ஸ்டிபன் ஸ்பீல்பெர்க் ஆரம்பித்து வைத்த ட்ரெண்ட் இன்றும் வசூல் அறுவடை செய்து வருகின்றது.
இந்த Jurassic World Rebirth படம் மக்களிடையே மிக மோசமான விமர்சனங்கள் மற்றும் கலவையான விமர்சனங்களை தான் பெற்று வந்தது.
ஆனால், அவர்கள் டார்கெட் ஆடியன்ஸ் குழந்தைகள், குடும்பங்கள் தானே, அவர்களை இந்த படம் கவர்ந்துள்ளது. அதனால் என்னவோ இந்த படம் தற்போது வரை உலகம் முழுவதும் ரூ 4111 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது.
இந்தியாவில் மட்டுமே இப்படம் ரூ 90 கோடிகளுக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியுள்ளது.