மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் கடந்த 2018ஆம் ஆண்டு ‘தடாக்’ திரைப்படம் மூலம் கதாநாயகியாக பாலிவுட்டில் அறிமுகமானார்.
கடந்த ஆண்டு வெளியான ‘தேவரா’ திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக நடித்து தெலுங்கு சினிமாவில் கால்பதித்தார்.
இந்த நிலையில், பா.ரஞ்சித் தயாரிக்கும் வெப் தொடர் மூலம் நடிகை ஜான்வி கபூர் தமிழில் அறிமுகமாக உள்ளார். ‘களவாணி’ திரைப்படத்தின் இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் இந்த வெப் தொடர் உருவாக உள்ளது.
இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாகவும், இதற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.