பிக் பாஸ் தனலட்சுமி
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய தனலட்சுமி இப்ப வரைக்கும் எந்த டிவி நிகழ்ச்சிகளுக்கும் பேட்டி கொடுக்காமல் இருந்து வருகிறார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது 81வது நாளில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் இந்த நிகழ்ச்சியே முடிவடைய இருக்கிறது.
இந்த நிலையில் ஏற்கனவே கடந்த வாரம் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய தனலட்சுமி எவிக்ஷன் சரியானது அல்ல அவர் இன்னும் கடைசி வரைக்கும் நிகழ்ச்சியில் இருந்திருக்க வேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு சமூக வலைத்தளத்தில் எந்த வீடியோவையும் வெளியிடாமல் இருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தனலட்சுமி வெளியேறியதும் அவர் வெளியிட்ட வீடியோ என்று வெளியான வீடியோக்கள் அனைத்துமே பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு தனலட்சுமி வெளியிட்ட வீடியோக்கள் தான்.
பழைய வீடியோவை தான் சிலர் புது வீடியோ என்று கூறி பகிர்ந்து கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு போட்டியாளர்களும் வெளியேறியதும் அடுத்த திங்கள் கிழமை டிஸ்னி ஹாட் ஸ்டாரில் லைவ் வந்துவிடுவார்.
ஆனால் தனலட்சுமி அப்படி செய்யவில்லை. அது ரசிகர்களின் மத்தியில் கேள்வியை எழுப்பி இருக்கிறது. அது மட்டும் அல்லாமல் பல சேனல்களுக்கும் தொடர்ச்சியாக அனைத்து போட்டியாளர்களும் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
அதுவும் வெளிநாடுகளில் இருந்து வந்த போட்டியாளர்கள் கூட இதைத்தான் செய்திருக்கின்றனர். ஆனால் தனலட்சுமி இதை செய்யவில்லையே என்று பலர் கேள்வி எழுப்பி கொண்டிருக்கின்றனர்.
அதுமட்டுமல்லாமல் தற்போது நடந்து வரும் ப்ரீஸ் டாஸ்க்கில் தனலட்சுமி இல்லையே என்று அவருடைய ரசிகர்கள் அதிகமாக ஃபீல் பண்ணுகின்றனர்.
காரணம் தன்னுடைய அம்மாவை கூட்டி வந்து விட வேண்டும் என்று தனலட்சுமி அதிகமாக ஆசைப்பட்டு கொண்டிருந்தார் ஆனால் அவர் ஆசைப்பட்டது நடக்கவில்லையே என்றுதான், அது போல உள்ளே இருக்கும் ஒன்பது போட்டியாளர்களில் இப்போது வரைக்கும் ஏழு எட்டு போட்டியாளர்களின் உறவினர்கள் வந்துவிட்டனர்.
அனைவருமே சொல்லும் ஒரே வார்த்தையாக தனலட்சுமி நன்றாக விளையாடினார் என்றுதான் அதுபோல அவருடைய வெளியேற்றத்தையும் பற்றியும் அனைவருமே கருத்து கூறிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் தனலட்சுமி இந்த வாரம் கமல் முன்னிலையில் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வருவதாக தகவல்கள் பரவி வருகிறது.
இதற்கு முந்தைய சீசன்களில் கூட பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும் சில போட்டியாளர்கள் சீக்ரெட் ரூமில் வைக்கப்படுவர். அதுபோல தற்போது தனலட்சுமி வீட்டிற்கு அனுப்பப்படாமல் சீக்ரெட் ரூமில் இருக்கப்படுகிறார். அவர் இந்த ஒரு வாரம் விளையாட்டை முழுக்க பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்.
வார இறுதியில் மீண்டும் கண்டிப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் வர இருக்கிறார். இது சக போட்டியாளர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதத்திலும் விளையாட்டின் தன்மையை மாற்றி அமைக்கும் விதத்திலும் இருக்கப் போகிறது என்று தகவல்கள் பரவி வருகிறது.