ரஜினி நடிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கடந்த 1995ம் ஆண்டு வெளியான ‘பாட்ஷா’ படத்தில் நக்மா, ரகுவரன், விஜயகுமார், தேவன், ஜனகராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இந்தப் படத்தில் ரஜினிக்கு வில்லனாக ரகுவரன் நடித்திருந்தார். இந்த படம் 2017-ம் ஆண்டு மீண்டும் திரையிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா, பாட்ஷா படம் 30 ஆண்டுகள் நிறைவு அடைந்ததையொட்டி படத்தின் ரீ-ரிலீஸ் குறித்து பேசினார்.
அதாவது “4கே டிஜிட்டல் வடிவத்தில் வருகிற ஏப்ரல் மாதம் பாட்ஷா படம் ரீ-ரிலீஸ் செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
இதனால் ரஜினி ரசிகர்கள் படத்தின் ரிலீஸை எதிர்பார்த்து உள்ளனர்.