என்னை அறிந்தால் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழில் அறிமுகமானவர் நடிகை அனிகா. இவர் தமிழ் மட்டுமின்றி மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.
பின் தமிழில் என்ட்ரி கொடுத்த பின் மிருதன், நானும் ரவுடி தான் போன்ற படங்களில் நடித்து வந்த அனிகா மீண்டும், அஜித் – நயன்தாராவுடன் இணைந்து விஸ்வாசம் படத்தில் நடித்தார்.
குழந்தை நட்சத்திரமாக மட்டுமே நடித்து வந்த இவர் திடீரென ஓ மை டார்லிங் எனும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிவிட்டார். இப்படத்தில் ஹீரோவுடன் லிப் கிஸ் மற்றும் நெருக்கமான காட்சிகளில் நடித்திருந்த அனிகா சில சர்ச்சைகளையும் சந்தித்தார்.
சமீபகாலமாக கிளாமரில் முன்னணி நடிகைகளையே மிஞ்சும் அளவிற்கு போட்டோஷூட் நடத்தி வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் சிகப்பு நிற கிளாமர் உடையில் அனிகா நடத்தியுள்ள போட்டோஷூட் தற்போது வைரலாகி வருகிறது.