2012ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பத்ம வியூகம் படத்தில் அன்கிரெடிட் ரோலில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர் அம்ரிதா அய்யர்.
வடிவேலுவின் தெனாலி ராமன், ரஜினியின் லிங்கா மற்றும் விஜய்யின் தெறி உள்ளிட்ட பல படங்களில் சைடு ரோலில் நடித்திருப்பார்.
விஜய் ஏசுதாஸ் ஹீரோவாக நடித்த படைவீரன் படத்தில் ஹீரோயினாக 2018ம் ஆண்டு அறிமுகமானார் அம்ரிதா அய்யர். அதே ஆண்டு வெளியான விஜய் ஆண்டனியின் காளி படத்திலும் ஹீரோயினாக நடித்திருப்பார்.
ஆனால், அந்த இரு படங்களும் அவருக்கு சரியாக போகவில்லை. விஜய்யின் பிகில் படம் மூலமாகத்தான் தென்றலாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா நடிப்பில் வெளியான பிகில் படத்தில் பெண்கள் கால்பந்தாட்ட அணியின் கேப்டன் தென்றலாக நடித்து துவம்சம் செய்திருப்பார் அம்ரிதா அய்யர்.
பிகில் விஜய்யின் பல ரெசம்ப்ளன்ஸ் இவரது கதாபாத்திரத்திற்கு அப்படியே காப்பி பேஸ்ட் செய்திருப்பார் இயக்குநர் அட்லி. அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு அம்ரிதா அய்யருக்கு பல படங்களில் வாய்ப்புகள் குவிந்தன.
ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக வணக்கம்டா மாப்பிள்ளை படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர், கவினுக்கு ஜோடியாக லிஃப்ட் எனும் பேய் படத்தில் நடித்து அசத்தினார்.
அந்த படம் ஹீரோயினாக அம்ரிதா அய்யருக்கு நல்ல வெற்றியை தேடித் தந்தது. காபி வித் காதல் படத்திலும் நடித்துள்ள அம்ரிதா அய்யருக்கு காபி மீது அதிக காதல் ஏற்பட்டுள்ளது.
காபி குளியல்
இன்ஸ்டாகிராமில் 2 மில்லியன் ரசிகர்களை நெருங்க உள்ள நிலையில், இவர் வெளியிடும் புகைப்படங்கள் எல்லாம் செம டிரெண்டாகி வருகிறது.
இந்நிலையில், ஆடை அணியாமல் காபி குளியல் போடும் புகைப்படத்தை தற்போது பதிவிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார் நடிகை அம்ரிதா அய்யர். மேலும், இதுவொரு விளம்பரத்திற்கான புகைப்படம் என்றும் குறிபிட்டுள்ளார்.
கஃபைன் மற்றும் விட்டமின் இ-ன் கலவையுடன் இருக்கும் காபியில் குளியல் போட்டால் உடலுக்கு நன்மையை பயக்கும் என அதற்கு கேப்ஷனையும் போட்டு இருக்கிறார் அம்ரிதா அய்யர்.
இதுவொரு பெயிடு விளம்பரம் என்பதால், ரசிகர்கள் கண்ணை மூடிக் கொண்டு காபி குளியலை போட்டு விடாதீர்கள், உங்கள் ஸ்கின்னுக்கு அது செட்டாகுமா? என்கிற மருத்துவ ஆலோசனையை பெற்ற பின்னர், இதை முயற்சித்துப் பாருங்கள்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.