கடந்த 2000ம் ஆண்டு ’என்னவளே’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சினேகா. தற்போதும் அவர் தனது வயதுக்கேற்ற கேரக்டரில் நடித்து பிஸியான நடிகையாக தமிழ் சினிமாவில் உள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக நடிகை சினேகா தீவிர உடற்பயிற்சி செய்து ஸ்லிம்மாகி வருவதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.
அந்த புகைப்படங்களை பார்க்கும் போது 20 வருடத்துக்கு முன்னர் பார்த்த சினேகா மாதிரி ஸ்லிம்மாக இருக்கிறார் என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
இந்த புகைப்படத்திற்கு ’நீங்கள் ஒரு சவாலை எதிர் கொண்டால் மட்டுமே மாற்றத்தையும் பெற முடியும்’ என்று கேப்ஷனாக சினேகா பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.