விஜய் டிவியில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றவர் நடிகை ஷெரின்.
இவர் தனக்கு இரண்டாவது முறையாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திரையுலக பிரபலங்கள் பலரும் அடுத்தடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நடிகர்கள் மகேஷ் பாபு, சத்யராஜ், நடிகைகள் த்ரிஷா, ஸ்வரா பாஸ்கர், இசையமைப்பாளர் தமன் உள்ளிட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான நடிகை ஷெரின், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருந்தார்.
தடுப்பூசி செலுத்தியும் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் இருப்பினும் விரைவில் குணமாகி விடுவேன் என்றும் ஷெரின் வீடியோ ஒன்றில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று மீண்டும் ஷெரினுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மீண்டும் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இந்த முறை தனக்கு காய்ச்சல் மற்றும் தொண்டை அலர்ஜி, தலைவலி உள்பட ஒரு சில உபாதைகள் ஏற்பட்டு இருப்பதாகவும் மருத்துவரின் அறிவுரைப்படி தனிமைப்படுத்தி கொண்டு தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார் ஷெரின்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.