நடிகை சமந்தா கடந்த 2024ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து உடல்நலக் குறைவால் படங்களில் நடிப்பதைத் தவிர்த்தார். இதைத் தொடர்ந்து சில மாதங்களாகச் சிகிச்சையில் இருந்த நிலையில், தற்போது பிஸ்னஸ், விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது எனப் பல முயற்சிகளில் இறங்கியுள்ளார்.
இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சமந்தா அவ்வப்போது ரசிகர்களிடம் கலந்துரையாடுவது உண்டு. மேலும் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் இவர் வெளியிட வீடியோ ஒன்றில் சுமார் 110 கிலோ எடையுள்ள பார் கம்பியை அசால்டாக தூக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை சமந்தாவின் நடிப்பில் தமிழ் இறுதியாக வெளியான திரைப்படம் குஷி. கடந்த 2023ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தை டோலிவுட் இயக்குநர் சிவா நிர்வாணா இயக்கி இருந்தார்.
இதைத் தொடர்ந்துதான் நடிகர் வருண் தவானுடன் சிட்டாடல் ஹன்னி பன்னி என்ற வலை தொடரில் நடித்திருந்தார். மேலும் தற்போது புதிய திரைப்படங்களை நடிப்பதற்காக கதைகளைக் கேட்டுவருவதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.