கடந்த ஆண்டு முழுவதும் நாகசைதன்யா – சமந்தாவின் விவாகரத்து தான் சோசியல் மீடியாவில் டாப்பில் இருந்தது. அவர்களை தொடர்ந்து தனுஷ் – ஐஸ்வர்யா உடைய விவாகரத்து ரசிகர்கள் மட்டுமல்லாமல் சினிமா பிரபலங்களுக்கும் பேரதிர்ச்சியாக அமைந்தது.
இந்நிலையில் தற்போது பிரபல ஹிந்தி நடிகை ராக்கி சாவந்த் விவாகரத்து செய்ய இருப்பதாக பதிவிட்டு இருக்கும் பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக திகழ்பவர் ராக்கி சாவந்த்.
இந்தி மொழியில் மட்டுமில்லாமல் கன்னடம், மராத்தி, தெலுங்கு, தமிழ் என பிற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். தமிழில் இவர் என் சகியே, முத்திரை, கம்பீரம் போன்ற சில படங்களில் ஒரு பாடலுக்கும் நடனமாடியிருக்கிறார்.
ராக்கி சாவந்த் அண்மையில் பிக் பாஸ் சீசன் 15ல் கலந்து கொண்டார். ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது இவரை குறித்து பல சர்ச்சைகள் எழுந்திருந்தது.
இந்நிலையில் இன்று ராக்கி சாவந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவரை பிரிந்து விட்டதாக பதிவு ஒன்றை போட்டுள்ளார். அவரின் இந்த பதிவு தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.