மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக 1997 முதல் 2001 வரை குழந்தை நட்சத்திரமாக எண்ணற்ற படங்களில் நடித்து தற்போது நாயகியாக வலம் வருபவர் மஞ்சிமா மோகன்.
கடந்த 2015 ஆம் ஆண்டு நிவின் பாலியுடன் நடித்த ‘ஒரு வடக்கன் செல்ஃபி’ படத்தில் கதாநாயகியாக நடித்தார். இவரும் தமிழ் சினிமாவை சேர்ந்த முன்னணி நடிகரும் காதலித்து வருவதாக கடந்த சில மாதங்களாக செய்திகள் கசிந்த வண்ணம் உள்ளன.
முத்தையா இயக்கத்தில் வெளியான ’தேவராட்டம்’ என்ற படத்தில் நடித்த போது கெளதம், மஞ்சிமா மோகன் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்க ஆரம்பித்ததாகவும் இந்த காதலுக்கு இரு குடும்பத்தினரும் பச்சைக்கொடி காட்டி விட்டதை அடுத்து விரைவில் அதிகாரபூர்வ திருமண தேதி வெளியாகும் என சமூக வலைத்தளங்களில் செய்திகள் தீயாக பரவியது.
இந்நிலையில் மலையாள ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த மஞ்சிமா, “3 வயதில் சினிமாவுக்கு வந்தேன். என் வாழ்க்கையில் நடந்த எந்த முக்கிய சம்பவங்களையும் மக்களிடம் இருந்து மறைத்ததில்லை.
எனது வாழ்க்கையில் ஏற்படும் ஒவ்வொரு மகிழ்ச்சியையும் பொதுமக்களுடன் பகிர்ந்து கொள்வதை விரும்புபவள் நான். அது சிறியதாக இருந்தாலும் பெரியதாக இருந்தாலும்.
என் வாழ்க்கையில் திருமணம் போன்ற பெரிய நிகழ்வை யாரிடமும் மறைக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. இந்த செய்தியை வெளியிட்டவர் என்னிடம் அதை கேட்டபோது நான் மறுக்கவே செய்தேன். ஆனால் அவர் தொடர்ந்து அதை வெளியிட்டார். அது எனக்கு வேதனையை ஏற்படுத்தியது. அதன்பின் அதை கண்டுகொள்ளவில்லை.
இந்த விஷயத்தில் என் பெற்றோரின் எதிர்வினை என்னவாக இருக்கும் என்பதே எனது பதட்டத்துக்கு காரணமாக இருந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர்கள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
இதனால் கடந்த சில மாதங்களாக மஞ்சிமா திருமணம் குறித்து வெளியான வதந்திகள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.