லாஸ்லியா மரியநேசன்
லாஸ்லியா மரியநேசனின் வீடியோவை பார்த்த ரசிகர்கள் ”ஒல்லியாகி இப்போ நீங்க நல்லாவே இல்ல” என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.
இலங்கையின் பிறந்தவர் லாஸ்லியா மரியநேசன், செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார். அங்கிருந்து பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டு பிரபல்யமடைந்தார்.
தமிழில் படவாய்ப்புகள் வர ப்ரென்ட்ஷிப், கூகுள் குட்டப்பா படத்தில் நடித்தார், தற்போதும் சில படங்களில் நடித்து வருகிறார்.
எப்போதுமே சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் லாஸ்லியா, அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம்.
பிக்பாஸில் கலந்துகொண்ட போது கொழு கொழு நாயகியாக இருந்த லாஸ்லியா, தற்போது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாகி விட்டார்.
அத்துடன் மாடர்ன் உடையில் இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் கலவையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இதைப் பார்த்த ரசிகர்களோ, நீங்கள் குண்டாக இருக்கும் போதுதான் அழகாக இருந்தீங்க; இப்போ எடை குறைஞ்சிட்டு நல்லாவே இல்ல. உங்களுக்கு எதும் நோய் வந்துருச்சா? என்றெல்லாம் கமெண்ட் அடித்து வருகின்றனர்.