- Advertisement -
தமிழகத்தைப் பொறுத்தவரை இளையதளபதி விஜய்க்கு ரசிகர்கள் இல்லாத தெருவே ஏன் வீடே இல்லை என்றே சொல்லலாம். விஜயோடு ஒரு காட்சியில் நடித்தால் கூட பெரிய அளவில் ரீச் ஆகிவிடலாம் என்னும் சூழல் இருக்கிறது.
இப்படியான சூழலில் விஜய்க்கு ஜோடியாகவே நடித்த ஒருவர் அடையாளமே தெரியாமல் மாறிப் போயிருக்கிறார்.
கடந்த 2003 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான புதிய கீதை படத்தில் செகண்ட் ஹீரோயினாக நடித்தவர் தான் அமிஷா படேல். 1975 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்த இவர் 5 வயதிலேயே பரதநாட்டியக் கலையை முறைப்படி கற்று இருக்கிறார்.
கடந்த 2000வது ஆண்டில் கஹோனா பியார் ஹாய் என்ற இந்திப்படத்தில் நடிகர் ரித்திக் ரோஷனுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்புத் தேடி வந்தது. ஆனால் உயர்கல்விக்காக அமெரிக்கா செல்ல முடிவு செய்து அந்த வாய்ப்பை மறுத்தார். பின்அவரே அந்த பாத்திரத்தில் மீண்டும் நடிக்கும் சூழல் வந்தது.
தெலுங்குத் திரையுலகில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக இவர் நடித்த பத்ரி படமும் பெரிய ஹிட் அடித்தது. தமிழில் புதிய கீதை படத்தில் ஹீரோயினாக நடித்த இவருக்கு இப்போது 45 வயது ஆகிறது. இப்போது வயதாகிப் போய் இருக்கும் அம்மணியின் ரீசண்ட் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரல் ஆகிவருகிறது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.