Wednesday, May 29, 2024
Homeசினிமாநிதி அகர்வால் சிம்பு பற்றி சொன்னது தான் நடந்துடுச்சு

நிதி அகர்வால் சிம்பு பற்றி சொன்னது தான் நடந்துடுச்சு

HTML tutorial

சிம்புவுக்கு திருமணம் செய்து வைத்துப் பார்க்க அவரின் பெற்றோர் ஆசைப்படுகிறார்கள். இந்நிலையில் சிம்புவின் பிறந்தநாள் அன்று திருமணம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்பட்டது. ஈஸ்வரன் படத்தில் தன்னுடன் சேர்ந்து நடித்த நிதி அகர்வாலை தான் சிம்பு திருமணம் செய்யப் போகிறார் என்று கூறப்பட்டது.

இந்த ஆண்டு அண்ணனுக்கு திருமணம் நடந்துவிடும் என்று சிம்பு ரசிகர்கள் ஆவலுடன் இருந்தார்கள். ஆனால் சிம்புவின் பிறந்தநாள் அன்று திருமண அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை. தன் உடல் எடையை வெகுவாக குறைத்து ஒல்லியான வீடியோவை தான் வெளியிட்டார் சிம்பு.

சிம்புவும், நிதி அகர்வாலும் காதலிக்கிறார்கள், லிவ் இன் முறைப்படி வாழ்ந்து வருகிறார்கள் என்று பேச்சு கிளம்பியது. இது குறித்து அறிந்த நிதி அகர்வாலோ, அதெல்லாம் உண்மை இல்லை. நானும், சிம்புவும் நல்ல நண்பர்கள் மட்டுமே. காதல் எல்லாம் கிடையாது என்று விளக்கம் அளித்தார்.

நிதி அகர்வால் விளக்கம் அளித்தும் பலரும் நம்பவில்லை. இதையடுத்து சிம்புவின் பிறந்தநாள் அன்று திருமண அறிவிப்பு வெளியாகாததை பார்த்த பிறகே, நிதி அகர்வால் சொன்னது தான் உண்மை போன்று என்கிறார்கள். நிதி அகர்வால் இல்லாவிட்டாலும் வேறு யாராவது ஒரு பெண்ணை சிம்பு விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம்.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

RELATED ARTICLES

இதயும் பாருங்க

இதயும் பாருங்க

சற்று முன்