Tue, Aug16, 2022
Homeசினிமாகர்ப்பிணியாக நடிகை வனிதா: வைரலாகும் புகைப்படம்

கர்ப்பிணியாக நடிகை வனிதா: வைரலாகும் புகைப்படம்

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோ தயாரிக்கும் அடுத்த படம் ’வாசுவின் கர்ப்பிணிகள்’ என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் அனிகா சுரேந்திரன், வனிதா விஜயகுமார் மற்றும் சீதா ஆகியோர் நிறைமாத கர்ப்பிணியாக நடித்திருந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி வைரல் ஆனது.

இந்த நிலையில் இந்த படத்தின் வனிதாவின் கேரக்டர் குறித்த போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. நடிகை வனிதா ‘பல்லவி’ என்ற கேரக்டரில் நடித்து வருவதாக கூறப்படும் இந்த போஸ்டரில் அவர் கர்ப்பமாக இருப்பது போன்று உள்ளது என்பதும் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜீவி பிரகாஷ் நடித்த ’பென்சில்’ என்ற படத்தை இயக்கிய இயக்குனர் மணிநாகராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார். அவின் மோகன் சித்தாரா இசையில், பிகே வர்மா ஒளிப்பதிவில், விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3JWB0En

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க