Sun, Sep25, 2022
HomeBreakingராஜபக்ஷ குடும்பம் திருகோணமலையில் தஞ்சம்; மக்கள் முற்றுகை

ராஜபக்ஷ குடும்பம் திருகோணமலையில் தஞ்சம்; மக்கள் முற்றுகை

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குடும்பத்தினர், திருகோணமலை கடற்படை முகாமில் தஞ்சமடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன், அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்களும் இன்று (10) காலை திருகோணமலை கடற்படை முகாமில் வந்திறங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனையடுத்து, திருகோணமலையில் உள்ள கடற்படை முகாமை, பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ராஜபக்ஷ உள்ளிட்ட குடும்பத்தினர், திருகோணமலை கடற்படை முகாமில் இருந்து கப்பல் மூலம் நாட்டை விட்டு வெளியேறத் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் திருகோணமலை கடற்படை முகாமில் தற்போது பதட்ட நிலைமை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3JWB0En

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க