Sun, Sep25, 2022
HomeBreakingஅனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை! வெளியான அறிவிப்பு

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை! வெளியான அறிவிப்பு

கொழும்பு, செப்டெம்பர் 15

நாட்டிலுள்ள சகல பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 19ஆம் திகதி விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

செப்டெம்பர் 19ஆம் திகதி அரச நிறுவனங்களுக்கு விசேட விடுமுறை தினமாக பொது நிர்வாக அமைச்சு அறிவித்திருந்தது.

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கை முன்னிட்டு, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்திருந்தது.

எவ்வாறாயினும், அரசாங்கத்தின் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்க விடுமுறை தினம் தடையாக இருக்கமாட்டாது என பொதுநிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் விடுத்துள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் பாடசாலைகளுக்கும் அதே விடுமுறை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே அனைத்து அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கும் குறித்த நாளை விடுமுறை தினமாக கருதுமாறு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Android App Download Link – https://bit.ly/3JWB0En

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க