மன்னார் பொது வைத்தியசாலை சுற்றுவட்டப் பகுதியில் நேற்று (13) இரவு 11 மணியளவில் விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மன்னார் பேசாலைப் பகுதியில் இருந்து வைத்தியசாலை சந்தி நோக்கிப் பயணித்த குறித்த வாகனம் வைத்திய சாலை சுற்று வட்ட பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள கடைகளில் மோதி விபத்திற்குள்ளாகியது.
இவ் விபத்தில் வைத்தியசாலை பகுதியில் அமைக்கப்பட்டு நடாத்தப்பட்ட பெண் தலைமத்துவ குடும்பம் ஒன்றின் விற்பனை நிலையம் முற்றாக சேதமாகியுள்ளதுடன் அருகில் இருந்த சில கடைகளும் சேதமடைந்துள்ளது.
குறித்த விபத்தில் சாரதி மற்றும் நடத்துனர் பலத்த காயங்களுடன் அப்பகுதி இளைஞர்களால் மீட்கப்பட்டு மன்னார் பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.