பஸ் கட்டணங்களை அதிகரிப்பதற்கு போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டணத்தை எதிர்வரும் புதன்கிழமை முதல் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து பஸ் கட்டணத்தை அதிகரிக்குமாறு தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
அதனையடுத்து, போக்குவரத்து அதிகாரிகளுக்கும் பஸ் சங்கங்களுக்கும் இடையே நடைபெற்ற கலந்துரையாடலில் பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இணக்கம் வெளியிடப்பட்டது.
அதன்போது, பஸ் கட்டணத்தை மறுசீரமைப்பது குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்குமாறு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், குறித்த அறிக்கை புதன்கிழமைக்குள் சமர்பிக்கப்படவுள்ளதுடன், அதனை தொடர்ந்து கட்டண அதிகரிப்பு தொடர்பில் அறிவிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.