டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று இன்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து, நமீபியா அணிகள் மோதின.
டாஸ் வென்ற நமீபியா பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய ஸ்காட்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மைக்கேல் லீஸ்க் 44 ரன்கள் சேர்த்தார்.
இதையடுத்து 110 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நமீபியா அணி களமிறங்கியது. துவக்க வீரர்கள் கிரேக் வில்லியம்ஸ் 23 ரன்களும், மைக்கேல் வேன் 18 ரன்களும் எடுத்து நம்பிக்கை அளித்தனர்.
ஷேன் கிரீன் (9), கேப்டன் எராஸ்மஸ் (4) ஆகியோர் விரைவில் விக்கெட்டை இழந்தனர். அணியின் ஸ்கோர் 102 ரன்கள் என்ற நிலையில் இருந்தபோது, டேவிட் வீஸ் 16 ரன்களில் ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் ஸ்மித் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவித்தார். கடைசி ஓவரில் ஒரு ரன் தேவை என்ற நிலையில், ஸ்மித் முதல் பந்தில் சிக்சர் அடித்து வெற்றியை உறுதி செய்தார். அவர் 32 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
5 பந்துகள் மீதமிருந்த நிலையில், 4 விக்கெட் வித்தியாசத்தில் நமீபியா அணி வெற்றி பெற்றது. 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய ரூபன், ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.