S. Ve. Shekher: மசாஜ் ஆர்வம் – மருத்துவமனையில் நடிகர்
ஆயில் மசாஜ் செய்த காரணத்தினால் பழம்பெரும் நடிகரான எஸ்.வி.சேகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராகவும், காமெடி நடிகராகவும் பல்வேறு படங்களில் நடித்து வருபவர் எஸ். வி.சேகர்.
இவர் 1974 ஆம் ஆண்டு நாடகப்பிரியா என்ற ஒரு நாடக குழுவை நிறுவினார். அமெரிக்கா, துபாய், கனடா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, பாங்காங் போன்ற பிற நாடுகளிலும் தன்னுடைய நாடக குழுவின் மூலம் நாடகங்களை நடித்தி வெற்றி கண்டுள்ளார்.
சமீபத்தில் எஸ். வி.சேகர் பாஜக கட்சியில் சேர்ந்து தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அரசியல், நடிப்பு மட்டுமின்றி இவர் சமூக வலைத்தளங்கில் மிகவும் ஆக்டிவாக சில கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.
நயன்தாரா மார்பகங்களை பற்றிய கருத்து – சின்மயி ஆவேசம்
இது குறித்து அவர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “திடீரென வாந்தியுடன் கடுமையான தலைசுற்றலுடன் ஆர்.ஏ.புரத்திலுள்ள மெட்ராஸ் இஎன்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன்.
எல்லாவற்றுக்கும் காரணம் என் ஆர்வ கோளாறால் எண்ணெய் மசாஜ் செய்ததால் ஏற்பட்ட விளைவு தான். கடவுள் அருள் மற்றும் டாக்டர் மோகன் காமேஸ்வரனால் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டேன்.
இப்போது வீட்டிலேயே முழு ஓய்வு எடுத்து கொள்கிறேன். ஒவ்வொரு நாளும் நாம் ஒரு பாடம் கற்று கொள்கிறோம். இந்த முறை எந்த விலையும் இல்லாமல் NO MORE OIL MASSAGES. உங்கள் பிரார்த்தனைகளுக்கு நன்றி” என அதில் குறிப்பிட்டு உள்ளார்.
நடிகர் எஸ்.வி.சேகரின் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Android App Download Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.