3 நிபந்தனைகளின் கீழ், கேஸ் சிலிண்டர்களை விநியோகிப்பதற்கு அனுமதிப்பதாக நுகர்வோர் அதிகார சபை, அண்மையில் அறிவித்திருந்தது.
இந்நிலையில், சிலிண்டரில் ஒரு வித்தியாசம் ஏற்படுத்தும் வகையில், லிட்ரோ கேஸ் சிலிண்டர் நிறுவனம், அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. அத்துடன், அந்த வகையான சிலிண்டர்களை விற்பனைச் செய்யும் நடவடிக்கையையும் ஆரம்பித்துவிட்டது.
லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரை நீங்கள், கொள்வனவு செய்பவர்களாயின், புதிய சிலிண்டர்கள் வால்வுகளில் சிவப்பு மற்றும் வௌ்ளை நிறத்துடன் கூடிய பொலித்தீன் பாதுகாப்பு உறை இடப்பட்டிருக்கும் என நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை அறிவித்துள்ளது.
பழைய சிலிண்டர்களில், சாதாரண பாதுகாப்பு உறை மட்டுமே இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.