கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாத பணியாளர்கள், பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்படுவர் என்ற உத்தரவு வெளியாகி உள்ளது.
சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில், முதன் முதலில், கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று பரவியது. இது, அமெரிக்கா, இத்தாலி, இந்தியா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவி பாதிப்புகளை ஏற்படுத்தியது. கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு விட்டாலும், அது பல்வேறு வகைகளில் உருமாற்றம் அடைந்து வருகிறது.
ஒருசில நாடுகளில் கொரோனா தடுப்பூசி கட்டாயம் என்ற உத்தரவுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் கொரோனா கட்டுப்பாடுகளுக்கும் எதிராக பொது மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கனடா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் கொரோஉ தடுப்பூசி கட்டாயம் ஆக்கப்பட்டதை எதிர்த்து நகராட்சி பணியாளர்களும், மக்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதாவது, நியூயார்க் நகராட்சி பணியாளர்கள் கட்டாயமாக தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் தடுப்பூசி எடுக்காதவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் மேயர் அலுவலகம் உத்தரவிட்டிருக்கிறது.
எனவே, தடுப்பூசி எடுத்துக் கொள்ளாத பணியாளர்கள் 4,000 பேர் பணி நீக்கம் செய்யப்படும் நிலையில் உள்ளனர். நகராட்சி பணியாளர்களும், மக்களும், தடுப்பூசி எடுத்துக் கொள்வது தங்களின் உரிமை என்றும் அரசு நகராட்சி நிர்வாகம் உத்தரவை, திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதற்கிடையே நியூயார்க் நகர நிர்வாகத்தின் கொரோனா தடுப்பூசி கட்டாயம் என்ற உத்தரவுக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.