உலகில் மிக அழகானவர்கள் அதிகமாக வாழும் நாடுகளின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இந்தப்பட்டியலை ரெட்டிட் (Reddit) தளம் வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலின்படி, 926 வாக்குகளுடன் டென்மார்க் 10 ஆவது இடத்திலும், 958 வாக்குகளுடன் உக்ரைன் 9 ஆவது இடத்திலும், 1,024 வாக்குகளுடன் இத்தாலி 8 ஆவது இடத்திலும் உள்ளது.
1,033 வாக்குகளுடன் பிரான்ஸ் 7 ஆவது இடத்திலும், 1,096 வாக்குகளுடன் பிரேசில் 6 ஆவது இடத்திலும், 1,312 வாக்குகளுடன் கனடா 5 ஆவது இடத்திலும், 1,468 வாக்குகளுடன் ஜப்பான் 4 ஆவது இடத்திலும் உள்ளது.
3 ஆவது இடத்தில் 1,899 வாக்குகளுடன் சுவீடன் உள்ளதுடன், 1,936 வாக்குகளுடன் அமெரிக்கா 2ஆவது இடத்திலும் உள்ளது. அதேசமயம், குறித்த பட்டியலில் முதலிடத்தில் 2,628 வாக்குகளுடன் இந்தியா உள்ளது.