முதல் ஆட்டத்தில் நமீபியாவுடன் தோற்ற இலங்கை அணி, 2ஆவது போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொண்டது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்களை மட்டுமே எடுத்தது.
இந்த ஆட்டத்தின் 15ஆவது ஓவரை வீசிய கார்த்திக் மெய்யப்பன் ஹாட்ரிக் விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். பனுகா ராஜபக்ஷா, சரி அசலங்கா, தசுன் ஷனகா என மூன்று முக்கிய பேட்டர்களின் விக்கெட்டுகளை அடுத்தடுத்த பந்துகளில் எடுத்து சாதனை செய்தார்.
மேலும் டி20 உலக கோப்பையில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய 5ஆவது பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்தார் கார்த்திக் மெய்யப்பன்.
இதற்கு முன்னதாக பிரெட் லி (2007), வநிந்து ஹசரங்கா (2021), காகிசோ ரபாடா (2021), கர்டிஸ் காம்பெர் (2021) ஆகியோர் வரிசையில் தற்போது கார்த்திக் மெய்யப்பனும் இணைந்துள்ளார்.
மேலும் இப்போட்டியில் மொத்தம் 4 ஓவர்கள் வீசிய கார்த்திக் மெய்யப்பன் வெறும் 19 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்நிலையில் இவர் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Android App Download Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.