சில சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
2022.02.11ம் திகதியிடப்பட்ட 2266/55 இலக்க அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி வைத்தியசாலை, மருந்தகங்கள், மின்சார விநியோகம், முதியோர் இல்லங்கள், நோயாளர் பராமரிப்பு சேவைகள் மற்றும் சிகிச்சை ஆகியவை தொடர்பிலான அனைத்து அவசியமான சேவைகள் மற்றும் தொழில்கள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
[pdf-embedder url=”https://www.seithi.lk/wp-content/uploads/2022/02/2266-55_E.pdf”]
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.