துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள இறக்குமதி செய்யப்பட்ட பால்மா இன்று(11) முதல், புதிய விலையில் சந்தையில் விநியோகிக்கப்படவுள்ளதாகப் பால்மா இறக்குமதியாளர்கள் சங்க பிரதிநிதி லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்துள்ளார்.
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மா பொதியின் புதிய விலை 1,195 ரூபாயாகும். 400 கிராம் பால்மா பொதியின் புதிய விலை 480 ரூபாயாகும்.
இதேவேளை, சீமெந்து மற்றும் கோதுமை மா என்பவற்றின் புதிய விலைகள் இன்றைய தினம் அறிவிக்கப்படவுள்ளன.
முன்னதாக, 50 கிலோகிராம் நிறையுடைய சீமெந்து மூடையின் விலை 200 ரூபாயினால் அதிகரிக்க வேண்டுமென சீமெந்து விநியோகஸ்தர்கள் கோரியிருந்தனர்.
குறித்த விலையை 100 ரூபாயினால் மாத்திரம் அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண தெரிவித்திருந்தார்.
இதற்கமைய 50 கிலோகிராம் நிறையுடைய சீமெந்து மூடையின் விலையை 97 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரம், ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 10 முதல் 12 ரூபாய் வரையில் அதிகரிக்கப்படவுள்ளதாகக் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.