யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பகுதியில் வீடொன்றில் வயோதிபப் பெண்கள் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
மாவடி, சங்கரத்தை என்ற இடத்தில் உள்ள வீடொன்றில் இவ்வாறு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
76 வயதுடைய ஒருவரும், 73 வயதுடைய ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
ஒருவர் இரண்டு வாரங்களுக்கு முன்பாகவும், மற்றையவர் இரண்டு நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இருவர் மட்டுமே அந்த வீட்டில் வசித்து வந்த நிலையில், அவர்களுக்கு உதவி இல்லை என்று விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது.
மாதாந்த உதவிப் பணம் பெற்றுக்கொள்ளவில்லை என்று கிராம அலுவலகர் வீடு தேடிச் சென்ற போதே இருவரும் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
இருவரும் மர்மான முறையில் உயிரிழந்துள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.