ஒவ்வொரு நாட்டு அரசும் தனது அரசு ஊழியர்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. அரசு ஊழியர்கள் இல்லை என்றால் அரசாங்கமே இல்லை என்பதை எவராலும் மறுக்க முடியாது. அரசின் நலத் திட்டங்கள் ஏழை – எளிய மக்களுக்கு சென்றடைவதில் அரசு ஊழியர்கள், அதிகாரிகளின் பங்கு அளப்பரியது.
இந்நிலையில், ஐரோப்பிய நாடான பெல்ஜியம், தனது அரசு ஊழியர்களுக்காக புதிய சட்டத்தை கடந்த சில வாரங்களுக்கு முன்பு உருவாக்கியது. அதாவது, அரசு ஊழியர்களை பணி நேரம் தவிர்த்து பிற நேரங்களில் அழைக்கக் கூடாது என்பது தான் அந்த சட்டம்.
ரைட் டூ டிஸ்கனெக்ட் என்னும் திட்டத்தின் படி, அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை வேலை நேரம் தவிர்த்த பிற நேரங்களில் அழைத்து தொல்லை செய்யக் கூடாது என்றும், அதே சமயம் இந்த திட்டத்தை அரசு ஊழியர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது என்றும், இந்த உத்தரவை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும், இது பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாகவும் பெல்ஜியம் அரசு தெரிவித்து இருந்தது.
அதன்படி, பெல்ஜியம் அரசின் ரைட் டூ டிஸ்கனெக்ட் சட்டம் கடந்த 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால் அந்நாட்டில் பணிபுரியும் அரசுப் பணியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.