திறன்பேசியில் தொடர்ச்சியாக வீடியோ கேம் விளையாடி வந்த 22 வயதுடைய இளைஞன் விரக்தியில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.
இந்தச் சம்பவம் இளவாலையில் இடம்பெற்றுள்ளது.
திறன்பேசியில் பப்ஜி வீடியோ கேம் விளையாடுவது இளைஞனின் அண்மைக்கால நடவடிக்கையாக இருந்துள்ளது.
அதில் மூழ்கிப் போன அவர் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று உறவினர்கள் விசாரணையில் தெரிவித்தனர்.
இளைஞனின் சடலத்தில் காதுகளில் மாட்டிய நிலையில் ஹெட்செட் மற்றும் பொக்கெட்டில் அவரது தொலைபேசி என்பன காணப்பட்டுள்ளது.
சடலம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டு பிரேத பரிசோதனை மற்றும் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.