யாழ்ப்பாண மாவட்டத்தில் சீரற்ற காலநிலை காரணமாக 14 குடும்பங்களை சேர்ந்த 37 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 14 குடும்பங்களை சேர்ந்த 37 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் சிரற்ற காலநிலையால் 5 வீடுகள் பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. சேத விபரங்கள் தொடர்பில் குறித்த பிரதேச செயலகத்தினூடாக விவரங்கள் சேகரிக்கப்பட்டு கொழும்பு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அனுப்பி வைக்கப்பட உள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.