வவுனியா, இலுப்பையடிப் பகுதியில் பிள்ளையார் சிலையொன்று காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா, இலுப்பையடிப் பகுதியில் உள்ள இலுப்பை மரத்தின் கீழ் சிறிய கூடாரம் அமைக்கப்பட்டு, பிள்ளையார் சிலை வைத்து நீண்டகாலமாக வழிபடப்பட்டு வந்தது.
இலுப்பையடிப் பகுதி வர்த்தகர்கள், ஓட்டோ சாரதிகள், அப்பகுதியால் பயணத்தில் ஈடுபடும் மக்கள் எனப் பலராலும் வழிபடப்பட்டு வந்த பிள்ளையார் சிலையே இவ்வாறு காணாமல் போயுள்ளது.
இனந்தெரியாதநபர்கள், குறித்த சிலையை அங்கிருந்து அகற்றியுள்ளதுடன், சிலை இருந்த இடம் தற்போது வெறுமையாகக் காட்சியளிக்கின்றது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.